தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
4 வருடத்தில் 41 ஆயிரம் சிறுமிகள், இளம்பெண்கள் பாகிஸ்தானில் கடத்தல் - அதிரவைத்த ரிப்போர்ட்..!
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிருத்துவ மதத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று, கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துகொள்ளும் கொடூரம் தொடர்கதையாக நடந்து வருகிறது.
அங்கு வசித்து வரும் இந்துக்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மீறல்கள் குறித்து பேச எவ்வித மனித உரிமை அமைப்பும் அல்லது அரசியல் கட்சிகளும் முன்வருவது இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றங்கள் முதற்கொண்டு நீதியை வழங்காமல் இருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் இந்து மதத்தை சேர்ந்த சிறுமிகளின் கட்டாய திருமணம் மற்றும் மதமாற்ற சர்ச்சை தடுக்கப்படும் என்று முதலில் உறுதியளித்து இருந்த நிலையில், பின்னாளில் அதனை கண்டுகொள்ளவில்லை. கடந்த 2017 ஆம் வருடம் முதல் 2022 ஜனவரி வரை அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 ஆயிரத்து 585 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 3,571 சிறுமிகளின் நிலை தற்போது வரை என்ன ஆனது என தெரியவில்லை. கொரோனா பரவல் காலகட்டத்தில் கூட 2,395 இந்து மற்றும் கிருத்துவ சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.