பணநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தான்.. நிதிஉதவி கேட்டு சீனாவுக்கு பயணிக்கும் இம்ரான் கான்..!



Pakistan President Imran Khan Went to China Beijing

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவுடன் நட்புறவு வைத்துள்ள பாகிஸ்தான், தனது நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் உதவி கேட்டுள்ளது. 

இந்த உதவியை கேட்டுப்பெற்று வர இம்ரான் கான் சீனா செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. அப்போது, இருநாட்டு உறவுகளை வெளிப்படுத்தும் திட்டத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pakistan

இம்ரான் கானின் பயணத்தை சீனா வரவேற்றுள்ள நிலையில், இருநாட்டு வர்த்தக இணைப்புகளையும், பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் எனவும் பாகிஸ்தான் சென்ட் தலைவர் சாதிக் சஞ்சராணி தெரிவித்துள்ளார். இந்த பயணம் நடந்தால் இம்ரான் கான் சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை அடைவார்.