மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்- ஆண் குழந்தைக்காக ஏங்கும் மக்கள்! எங்கு தெரியுமா?
போலந்து நாட்டில் உள்ள மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காததால், காரணம் தெரியாமல் மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
போலந்து நாட்டில் நடைபெற்ற ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியில் மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்தில் இருந்து பெண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.இதனால் அனைவருக்கும் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகுதான் உண்மை வெளியாகியுள்ளது.
அதில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை. மாறாக பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அக்கிராமத்து மக்கள் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஆனால் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.