100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பனிக்குள் பாய்ந்த விமானம்! பயணிகளின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!



passenger-plane-skids-off-snowy-runway-in-iran

கெர்மன்ஷா விமான நிலையத்தில் ஈரானிலிருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது சறுக்கி பனிபடர்ந்த பகுதிக்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஈரான் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ 319 பயணிகள் விமானம், மெஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து கெர்மன்ஷா விமான நிலையத்திற்கு பறந்துள்ளது. இந்த விமானத்தில் 102 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். 

இந்நிலையில் விமானம் கொர்மன்ஷா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி அருகிலிருந்து பனி படர்ந்த பகுதியில் பாய்ந்துள்ளது. அதனை தொடர்ந்து பயணிகள் விமானத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்வால் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை நலமாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக, கெர்மன்ஷாவின் ஆளுநர் கடும் பனிப்பொழிவு மற்றும் தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட குறைபாடே இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறியுள்ளார்.