மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவில் கட்டப்படும் பிரம்மாண்ட ராமர் கோவில்!
ஆந்திர பிரதேச மாநில பத்ராசலம் ராமர் கோயில் தேவஸ்தானம் சார்பில் அமெரிக்கா, அட்லாண்டா அருகே உள்ள கம்மிங் பகுதியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவில் கட்டுமான பணிக்காக நந்தியாலா அடுத்த அல்லகட்டா பகுதியில் பாறைகளில் இருந்து தூண்கள் மற்றும் சில வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும் ராமர் மற்றும் சீதா சிலைகள் சிறப்பு விமான மூலம் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கலிபோர்னியா, ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
அதன் பின்னர் கோவிலில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற எந்தத் தகவலை பத்ராசலம் ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் பத்மநாபாச்சாரி தெரிவித்துள்ளார்.