மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வித்தியாசமான முறையில் காதலியை கொலை செய்து காதலன் நடத்திய நாடகம்!இறுதியில் நடந்தது என்ன?
1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் நூறாவது நாள். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கதாநாயகன் ஒவ்வொரு பெண்ணாக கொலை செய்து அவர்களை கான்க்ரீட் சுவருக்குள் மறைத்து வைத்திருப்பார்.அதே போல் ஒரு சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.
ரஷ்யாவில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை காங்ட்ரீட் சுவற்றில் மறைத்து வைத்திருந்த காதலனுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த டாடியானா முகோரோடோவா (24) வாசிலி மங்கோஷ்விலி (31 ) இருவரும் காதலித்துள்ளனர். ஆனால் அவர்களது காதல் திருமணத்தில் போய் முடியவில்லை. டாடியானா என்பவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒருநாள் வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் டாடியானாவிற்கு போன் செய்த அவருடைய காதலன் வாசிலி மங்கோஷ்விலி வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்து அங்கு சென்ற டாடியானா, இருவருக்குள்ளும் இருக்கும் காதல் விவகாரம் குறித்து அவருடைய மனைவியிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வாசிலி, ஆத்திரத்தில் டாடியானாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலுக்கு தீ வைத்து எரித்துவிட்டு, புதிய காங்கிரீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இதற்கிடையில் மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த டாடியானாவின் தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.பின்னர் இதுகுறித்து போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், வாசிலி கொலை செய்திருப்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட வாசிலிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.