உக்ரைனுக்கு இராணுவ தளவாடம் கொடுக்கும் நாடுகளின் மீது தாக்குதல்? - ரஷியா பரபரப்பு எச்சரிக்கை.!



russia-ukraine-war-russia-warning-about-ukraine-army-eq

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பும் ஆயுதங்களின் வாகனம் மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷியா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளையும் செய்கிறது. ரஷியாவுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ள ஏகாதியபத்திய மேற்கு நாடுகள், ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. 

நேரடியாக மேற்கத்திய நாடுகள் போர்க்களத்திற்கு வருகை தந்தால் வரலாற்றில் இல்லாத அழிவைத் தரவும் தயங்கமாட்டோம் என உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக எச்சரிக்கை செய்துள்ளார். இந்த நிலையில், ரஷியா மீண்டும் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

russia

இந்த விஷயம் தொடர்பாக ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியகோவ் தெரிவிக்கையில், "அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷிய படைகளை எதிர்த்து தாக்க உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. இது மிகவும் ஆபத்தான செயல்.  

அதேபோல, உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும், ரஷிய இராணுவத்தின் சட்டபூர்வ தாக்குதல் இலக்குகள் என்பதை மேற்கத்தியர்கள் உணர விடும். இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பப்படும் வெளிநாட்டு ஆயுதங்கள் மீதும், அதனை கொண்டு வரும் வாகனம் மீதும் ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தும்" என்று தெரிவித்தார்.