பேய்களின் மாறுவேட திருவிழாவில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு.!



South Korea Halloween Festival 151 Died

மேலைநாடுகளில் பல வித்தியாசமான திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். சமீபத்தில் கூட ஒரு நாட்டில் பீர் திருவிழா நடைபெற்றது. அதில் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து தற்போது தென்கொரியாவின் சியோல் நகரில் ஹாலோவின் திருவிழா நடைபெற்றது. 

ஹலோவன் திருவிழா என்பது மேலை நாடுகளில் மக்கள் பேய்கள், அரக்கர்களை போல வேடமிட்டு உலா வருவார்கள். இது அங்கு திரளாக கொண்டாடப்படும். இந்நிலையில், தென்கொரியாவில் நடந்த திருவிழாவில் சோகம் நடந்துள்ளது. 

சியோல் நகரில் நடந்த ஹலோவன் திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என்று அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். 

இதில், 100-க்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து இருப்பதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், தென்கொரிய அரசு ஒருநாள் துக்க தினம் கடைபிடிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.