அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அதிர்ச்சி.! குணமடைந்தவர்கள் உடலில் மீண்டும் செயல்பட தொடங்கிய கொரோனா வைரஸ்..! தென்கொரியாவில் 116 பேருக்கு மீண்டும் கொரோனா.!
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது அதிகம் பாதிக்கப்பட்டநாடுகளில் தென்கொரியாவும் ஓன்று. ஆனால், அந்நாட்டு அரசின் விதிமுறைகள், தேடிச்சென்று சோதனை செய்வது இப்படி பல காரணங்களால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், 10,564 பேர் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதில், 222 பேர் உயிர் இழந்த நிலையில் 7,534 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.தற்போது குணமடைந்து வீட்டிற்கு சென்ற 7,534 பேரில் 116 பேருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த ஆய்வுகள் ஒருபுறம் நடந்துவருகிறது. அதேநேரம், குணமடைந்தவர்கள் உடலில் மீண்டும் கொரோனா வைரஸ் வேறொருவர் மூலம் தாக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்றும், இவர்கள் உடலில் செயலாற்ற நிலையில் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.