மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூர சைக்கோ பெண்... 90 நாட்கள் காத்திருந்து.... டிவியை பார்த்து ஆசிரியை உடலை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.!
தென்கொரியாவைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களை பார்த்து அதனால் ஏற்பட்ட தனது கொலை செய்யும் ஆசையை நிறைவேற்றுவதற்காக மூன்று மாதமாக திட்டம் தீட்டி பள்ளி ஆசிரியை ஒருவரை கொலை செய்ததை காவல்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தென்கொரியாவைச் சார்ந்த ஜங் யூ ஜங் என்ற பெண் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கிறார். 23 வயதான இவர் தொலைக்காட்சி மற்றும் புத்தகங்களில் வரும் க்ரைம் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு மூன்று மாதங்களாக திட்டம் தீட்டி பள்ளி ஆசிரியை ஒருவரை தனது இலக்காக தேர்ந்தெடுத்து கொலை செய்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயைப் போல அந்த ஆசிரியையை அணுகி அதன் பின்பு ஒன்பதாம் வகுப்பு மாணவி போல வேடம் அணிந்து சென்று அவரை கொலை செய்துள்ளார்.
பின்னர் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு சூட்கேசில் வைத்து ஆளில்லாத காட்டுப்பகுதியில் வீசி இருக்கிறார். இவர் சென்ற டாக்ஸி டிரைவர் இவர் மீது சந்தேகமடைந்து காவல்துறையில் புகார் தெரிவித்ததையடுத்து ஜங் யூ ஜங் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் தான் கொலைகளை செய்யவே இல்லை என்று காவல்துறையிடம் தெரிவித்த அவர் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இது பற்றி தகவல் தெரிவித்த காவல்துறை அவரதுசெல்போனை ஆய்வு செய்தபோது கொலை செய்யப்பட்ட உடலை எவ்வாறு மறைப்பது என்று கடந்த மூன்று மாதங்களாக அவர் ஆய்வு செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியாக வசித்து வந்ததாகவும் அவர் பட்டப்படிப்பு முடித்ததிலிருந்து எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்தப் பெண்ணிற்கு மனநல சோதனை நடத்த இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.