மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 வயது சிறுமியை உயிருடன் எரித்துகொன்ற கொடூர தாய்.! தந்தையும் உடந்தையா? வெளியான பகீர் பின்னணி!!
அமெரிக்கா ஜார்ஜியா மாகாணத்தில் வசித்து வருபவர் இமான் மோஷின். இவரது மனைவி டிப்பணி மோஸ். இமான் மோஸிற்கு ஏற்கனவே திருமணமாகி இமானி மோஸ் என்ற மகள் உள்ளார். அவரும் தனது தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
ஆனால் டிப்பணி இமானியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் அவருக்கு உணவளிக்காமல் சித்ரவதைபடுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் பீமனுக்கு தெரியவந்த நிலையிலும் அவர் கண்டு கொள்ளாமல் தனது இரண்டாவது மனைவிக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்.மேலும் அவர்களுடன் இணைந்து தனது மகளை துன்புறுத்தவும் செய்துள்ளார்.
ஆனால் டிப்பணியின் பிள்ளைகள் மட்டும் மிகவும் வசதியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென இமான் போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இமானின் குடியிருப்பு அருகே குப்பைத் தொட்டியில் மொத்தமாக எரிந்த நிலையில் கிடந்த விமானியின் உடலை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் இமானியை எரித்துக் கொன்றது டிப்பணி என கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருந்த டிப்பணி மற்றும் அவரது பிள்ளைகளை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர்.
இந்நிலையில் தற்பொழுது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இமானியை எரித்துக்கொன்ற டிப்பணிக்கு மரண தண்டனையும், தனது மகளையே கொலை செய்ய துணையாக இருந்த இமான்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.