பிரபல கடையில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானது!. பதறிப்போன வாடிக்கையாளர்கள்!.



suddenly playd pron video in shop

சிங்கப்பூரின் சாங்கி  சாலையில் ஒரு பிரபலமான  கடையில் சாப்பிடுவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வந்து செல்லும் இடத்தில அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த கடையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இலவச வை-பை மற்றும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்கு தொலைக்காட்சியும் இருந்துள்ளது. வழக்கமாக தொலைக்காட்சியில் ஏதேனும் நிகழ்ச்சிகள், பாடல்கள் போன்றவை போடப்படும்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு வழக்கமாக  தொலைக்காட்சியில் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்த போது, திடீரென்று ஆபாசபடம் ஒளிபரப்பாகியுள்ளது. அதை வாடிக்கையாளர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அந்த கடையில் ஊழியர்கள், பிசியாக இருந்ததால், இதை அவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். அதன் பின் சற்றுநேரம் அந்த வீடியோ ஓடிய பின்னர் தொலைக்காட்சியை கடையின் உரிமையாளர் பார்த்து உடனடியாக நிறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது இருக்கும் தொலைக்காட்சியில் அதிக வசதிகள் உள்ளது. இதனால் இதை யாரோ இண்டர்நெட்டைப் பயன்படுத்தி, மொபைல் போன் மூலம் ஆபாசபடம் வரும் படி செய்துள்ளனர். இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அந்த கடையில் நடந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.