மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 மணிக்கு மேல தாக்குதல்.. பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி.. தெஹ்ரீக்-இ-தலிபான் பரபரப்பு அறிவிப்பு.!
தங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு மீறிவிட்டதால், நாங்கள் தாக்குதல் நடத்த இருக்கிறோம் என தெஹ்ரீக்-இ-தலிபான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பு, பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பாகிஸ்தான் நாட்டில் ஆயுதமேந்தி போராடும் குழுவினர் ஆவார்கள். ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள மலைகளில் வசித்து வரும் இவர்கள், அந்நாட்டின் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் பாகிஸ்தானின் பாதுகாப்பு படையினர் மற்றும் பாகிஸ்தான் பொதுமக்கள் மீது பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 2014 ஆம் வருடம் பெஷாவர் நகரில் அமைந்துள்ள இராணுவ பள்ளியில் நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழந்தனர்.
கடந்த அக். 25 ஆம் தேதி பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் இம்ரான் கான் அரசுடன் ஆறு அம்ச ஒப்பந்தத்தை மேற்கொண்டனர். இதன்படி, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவ. 30 ஆம் தேதி வரை இருதரப்பும் போர் நிறுத்தம் செய்துகொள்வது, சிறையில் இருக்கும் 102 தெஹ்ரீக்-இ-தலிபான் படையினர் விடுவிப்பது போன்ற 6 அம்சங்கள் இருந்தது.
இருதரப்புக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்து பிரச்சனையை முடித்து வைக்கும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு இருந்து வந்தது. இந்நிலையில், பாக். அரசு அக்.25 ஒப்பந்தத்தை மீறிவிட்டது, எங்களின் அமைப்பினரை கைது செய்கிறது என தெரிவித்துள்ள தெஹ்ரீக்-இ-தலிபான், ஒருமாத போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்த அக்குழுவின் தலைவர் உத்தரவிட்டுள்ளதால், எந்நேரத்திலும் தாக்குதல் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தொடுக்கப்படலாம் என்ற அச்சம் நிலவ தொடங்கியுள்ளது. இந்த பிரச்சனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது.