ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
மெக்சிகோ நாட்டில் பயங்கரம்... புலம் பெயர்ந்தோரை ஏற்றிச்சென்ற ட்ரக் கவிழ்ந்து விபத்து..!
மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ட்ரக் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் லாஸ் சோபாஸ் பகுதியில் புலம்பெயர்ந்தோரை ஏற்றி சென்ற ட்ரக் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 24 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் ட்ரக் ஓட்டுநர் வளைவில் வேகமாக டிரக்கை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த டிரக் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விசாரணையில் இந்த ட்ரக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகவும் ட்ரக் விபத்துக்குள்ளானதும் பலர் தப்பி ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.