டிக் டாக் ஆப் மீதான தடை திடீர் நீக்கம்.!! செம மகிழ்ச்சியில் டிக் டாக் பயனர்கள்! அதிபர் அதிரடி உத்தரவு..



Tik tok ban suspended in America

டிக் டாக் மீதான தடையை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய கடந்தாண்டு அந்நாட்டில் தடை விதித்தார். இதனால் ஏற்கனவே பதிவிறக்கம் செய்த்தவர்கள் மட்டுமே அந்த செயலிகளை பயன்படுத்திவந்தனர்.

இதற்கு முன்னதாக இந்தியாவிலும் பல்வேறு சீன செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் டிக் டாக் போன்ற பிரபலமான சீன செயலிகள் கடும் பிரச்சனைகளை சந்தித்துவந்தது. ஒருகட்டத்தில் டிக்டாக் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு தங்கள் நிறுவனத்தை விற்கப்போவதாகவும் பேச்சு எழுந்தது.

tik tok

இந்நிலையில் இந்த தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் . அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறினர்.

டிக் டாக் செயலி மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை அமெரிக்க அதிபர் நீக்கியுள்ளதால் டிக் டாக் பயனாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.