உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எப்படி? ஈரான் தொலைக்காட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!



ukrain-flight-attack


ஈரான் தலைநகரில் இருந்து உக்ரைன் தலைநகருக்கு 176 பேருடன் சென்ற விமானம் சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். ஈராக்கில் அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என பேசப்பட்டு வந்தது.

iran

விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இதனால் ஈரான் ஏவுகனை தாக்குதலில் உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக அமெரிக்கா, கனடா அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். தொழில் நுட்ப கோளாறால் விமானம் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் ஏவுகணையால் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது.

iranஇதனையடுத்து செயற்கைக்கோள்கள், ராடார் உள்ளிட்டவற்றின் சிக்னல் மூலம் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ததில், இரண்டு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் விமானம் தாக்கப்பட்டது தெரியவந்ததாக அமெரிக்க தரப்பில் கூறப்பட்டது.‌ 

இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில், உக்ரைன் விமானம் மனித தவறுகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.