தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உக்ரைனில் 280 கல்வி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய ரஷிய படைகள்.! வெளியான தகவல்.!
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 16-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ரஷியா இதுவரை உக்ரைனில் உள்ள சுமார் 280 கல்வி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளதாகவும் பல கல்வி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் கல்வி மற்றும் அறிவியல் துறை மந்திரி செர்கி ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார்.