மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஷியா - உக்ரைன் போர்: 1 இலட்சம் உக்ரேனியர்கள் போலந்து வழியாக இடம்பெயர்வு.!
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைனை மீண்டும் ரஷியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர்தொடுத்து சென்றுள்ள நிலையில், இருதரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. உக்ரைன் நாட்டிற்குள் வந்துள்ள ரஷிய படைகளை உக்ரைன் இராணுவம் எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.
இருதரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவரும் நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உக்ரைனில் உள்ள மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், நாட்டை விட்டும் உக்ரேனியர்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் - போலந்து நாட்டின் எல்லை வழியே இருவேறு மார்க்கங்களில் நடந்து சென்று எல்லையை கடக்கவும், சொந்த வாகனத்தில் எல்லையை கடக்கவும் போலந்து அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. போரினால் ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு, மக்கள் வெளியேறி வருகின்றனர்.
போருக்கு முன்னதாக மற்றும் தொடக்க நாளில் 7000 பேர் மட்டுமே வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களுக்குள் 1 இலட்சம் மக்கள் போலந்து எல்லை வழியே உக்ரைனை விட்டு வெளியேறி இருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.