மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடி அழுகிய சடலமாக காரில் மீட்பு; பச்சிளம் குழந்தை பிறந்த சில நாட்களில் சோகம்.!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் சஹானா நிக்கோல். இதே பகுதியைச் சார்ந்த இளைஞர் மேத்யூ. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே சஹானா இம்மாதத்தின் தொடக்கத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக காதல் ஜோடி பொருட்களை வாங்க வெளியே சென்றுள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவர்களை தொடர்பு கொண்டும் பலனில்லை என்பதால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அச்சமயம் தம்பதியின் கார் ஊருக்கு வெளியே இருந்துள்ளது. காரில் காதல் ஜோடி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இருவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.