10 ஆண்டுகளில் 65 இலட்சம் கால்நடைகள் உயிரிழப்பு; அமெரிக்காவில் தொடரும் சோகம்.. மீண்டும் அதிபயங்கரம்.!



us-texas-farm-factory-died

 

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் டெய்ரி ஃபார்ம் என்ற மாட்டுபண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணை மூலமாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விநியோகம் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் டெக்ஸாஸில் அமைந்துள்ள டெய்ரி ஃபார்ம் நிறுவனத்தின் பண்ணையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 18,000 மாடுகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

Texas

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்டநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் இது போன்ற தீ விபத்துகளில் சிக்கி சுமார் 65 லட்சம் கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.