அடக்கடவுளே.. இறைச்சிக்காக 300 பூனைகளை கொன்று சூப்: உணவகத்தின் அதிர்ச்சி செயல்.!!



Vietnam 300 cats kill for soup

 

இறைச்சி வகை உணவுகள் அந்தந்த நாட்டில் அமல்படுத்தப்பட்ட சட்டங்களுக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக விலங்குகள் கொல்லப்பட்டு அதிலிருந்து இறைச்சி கிடைக்கப்பட்டு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் வியட்நாமில் இருக்கும் உணவகம் ஒன்றில் ஒரு மாதத்திற்கு 300 பூனைகள் சூப்புக்காக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. 

World news

வியட்நாமில் ஏற்பட்டுள்ள இறைச்சி தட்டுப்பாடு காரணமாக தற்போது பூனை கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் உணவகம் ஒன்று ஒரு மாதத்திற்கு 300 பூனைகளை சமைத்து சூப் உட்பட பிற உணவுகளை தயாரித்து வழங்குகிறது. 

இது தொடர்பாக தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் இருந்த 20 பூனைகளை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி விட்டனர். மேலும் அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்.