தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வியட்நாமை அதிரவைத்த தீர்ப்பு.. கோடீஸ்வரர் பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை!
வியட்நாமில் 67 வயதான கோடீஸ்வர பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலதிபரான ட்ரூங் மை லான் என்பவர் அந்நாட்டில் மிகப்பெரிய மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த பெண் தொழிலதிபர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உருவானார். இதனிடையே மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அவர் மீது 12 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் வியட்நாம் நாட்டின் ஜிடிபியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவரது குற்றம் மன்னிக்க முடியாதது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.