முதலிரவிற்கு முன்பு பெண்களுக்கு ஏற்படும் பயங்களும், பதட்டங்களும்!.
திருமணத்திற்கு முன்பு திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசைகள் அலைபாயும். ஆனால் திருமணத்தின் போது ஏற்படும் பதட்டம் என்பது பெண்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். புதிய இடம், புது முகங்கள் அவருடன் முதன் முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம் என பல பதட்டங்கள் இருக்கும்.
தன்னை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்களிடம் நீம் எப்படி நடந்துகொள்வது, எவ்வாறு பேசுவது போன்ற குழப்பங்கள் நிலவி வரும்.
திருமணம் ஆன பிறகு படுக்கையறையில் எவ்வாறு நடந்துகொள்வது?முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? என்ன ஆடை அணியவேண்டும் போன்ற சந்தேகத்தில் பெண்களுக்கு பதட்டம் ஏற்படுகிறது.
வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. முதலிரவில் கணவரிடம் பேசும் போது வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் அவர் என்ன நினைத்து கொள்வார் என்று ஒரு பயம் பெண்களிடம் ஏற்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா என்ற சந்தேகங்களும் அவர்களுக்குள் எழுகின்றன.
திருமணம் ஆனபிறகு காலையில் நேரதாமதமாக எழுந்துவிட்டால் கணவர் வீட்டில் உள்ளவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் உள்ளனர்.