திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆணுறுப்பு சிறிதாக இருந்தால் மனைவியை திருப்திப்படுத்த இயலாதா? - உண்மை என்ன?.. ஆண்களே தெரிந்துகொள்ளுங்கள்.!
தாம்பத்தியத்தில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான சந்தேகம் என்பது இருந்துகொண்டு இருக்கும். இதில், ஆணுறுப்பின் அளவு என்பது தொடர்பாக பல கட்டுக்கதைகள் பரப்படுவதால் அதுகுறித்த உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். ஆணுறுப்பு சிறிதாக இருந்தால் தாம்பத்தியத்தில் மனைவியை திருப்திப்படுத்த இயலாது, பெரிதாக இருந்தாலே மனைவி உற்சாகமாக இருப்பார் என்று பல கதைகள் உள்ளன.
மருத்துவ ரீதியாக இதனை ஆராய்ந்தால் ஆணுறுப்பின் அளவு அனைவருக்கும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். இயற்கையாக சற்று பெரிய ஆணுறுப்பை கொண்டவருக்கு விறைப்புத்தன்மை ஏற்பட்டபின் இருக்கும் ஆணுறுப்பின் அளவும், சிறிய ஆணுறுப்பை கொண்டவரின் விறைப்புத்தன்மைக்கு பின்னான ஆணுறுப்பின் அளவும் சமமாகும். அதாவது, பெரிய ஆணுறுப்பு அளவை கொண்டவரின் விறைப்புத்தன்மைக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறிய ஆணுறுப்பு கொண்டவரின் விறைப்புத்தன்மை இருக்கும்.
ஆணுறுப்பின் வளர்ச்சி என்பது 5 வயது வரை சிறியதாக இருக்கும், 13 வயது வரை இயல்பாக இருக்கும், 19 வயது வரை நல்ல வளர்ச்சி இருக்கும். இதை, எந்த மருத்துவராலும் ஆணுறுப்பின் அளவை பெரிதாக்க இயலாது. நம் ஊர்களில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்துமே அவர்களை நோக்கி மக்கள் திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர்த்து வேறொன்றும் நீளாது.
ஆணுறுப்பை பொறுத்தவரையில் அனைத்து காலத்திலும் ஒரேயளவில் இருக்காது. வெயில், மழை, உடல்நிலை மற்றும் மனநிலைக்கு ஏற்றாற்போல தனது அளவை மாற்றும். சிலருக்கு உறங்கி எழும்போது விறைப்புத்தன்மை ஏற்பட்டு ஆணுறுப்பு பெரிதாக இருக்கும். இதனை மருத்துவத்தில் எதிர்விளைவு விறைப்புத்தன்மை (Reflex Erection) என்று கூறுவார்கள். அதாவது, சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து ஆணுப்புறுப்புக்கு இரத்தம் பாய்ந்து பெரிதாகிறது.
ஆணுறுப்பின் அளவு பெரியளவில் இருந்தால் மட்டுமே மனைவியை திருப்திப்படுத்தலாம் என்பது மூடநம்பிக்கை. ஆனுப்பு விறைப்புத்தன்மை வந்ததும் ஆணுறுப்பானது 2 அங்குலம் முதல் 5 செ.மீ அளவில் நீளம் அடைந்தாலே போதுமானது. பெண்ணுறுப்பின் அளவு ஆறு அங்குலம் இருந்தாலும், முதல் இரண்டு அங்குலத்திலேயே உணர்ச்சி நரம்பு உள்ளது. அதனை தூண்ட ஆணுறுப்பு 3 அங்குலம் இருந்தாலே போதுமானது. பெண்ணை திருப்திப்படுத்தலாம்.
தனிமனிதருக்கு மூக்கு எவ்வுளவு பெரியதாக இருந்தாலும், அவரால் சாதாரண நபரை போல சுவாசிக்க இயலும் என்பதை போலவே ஆணுறுப்பின் அளவும். துணைகள் இருவரும் காதலுடன், அன்புடன், கொஞ்சல் மொழிகளுடன் பேசி உணர்ச்சியை அதிகரித்து புணர்ச்சி மேற்கொள்வதே இருவருக்குமான திருப்தியை அளிக்கும். அதனைப்போல, பெண்ணை கிளர்ச்சியடைய செய்யும் நிகழ்வில் பெண்ணுறுப்பு உடல் ரீதியான இயக்கத்தில் மட்டும் கிடையாது.
பெண்ணுறுப்பில் இருக்கும் கிளிட்டோரிஸ் பகுதியை தூண்டிவிடும் நேரத்தில் பெண்ணுக்கு கிளர்ச்சி கிடைக்கும். இதனால் உச்சி முதல் உள்ளங்கால் வரை கிளர்ச்சிக்கான அறிகுறி உண்டு. அது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும். சிலருக்கு கழுத்தில் முத்தமிடுவது கிளர்ச்சியை தரும். சிலருக்கு பாத விரலை தொடுவது கிளர்ச்சியை தரும். இவ்வாறாக தனது துணையின் கிளர்ச்சிப்பகுதியை கணவர் அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தில் உற்சாகத்தை தரும். புணர்ச்சி மட்டுமே பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் உச்சகட்டத்தை ஏற்படுத்தாது.
சாதாரண நிலையில் ஆணுறுப்பு 3.6 இஞ்ச் அல்லது 9.1 செ.மீ நீளத்துடன் இருக்கும். விறைப்புத்தன்மை ஏற்பட்டால் 5.2 இஞ்ச் அல்லது 13.1 செ.மீ அளவில் இருக்கும். ஒருசிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்பட்டாலும் 7 செ.மீ அளவு இருக்கும் ஆன்றுபு Micor Penis என்று அழைக்கப்படும். டெஸ்ட்டிரோஜன் ஹார்மோன் குறைபாடே இதற்கு காரணம் ஆகும். ஆணுறுப்பு பெரிதாக இருக்கும் பட்சத்திலேயே பெண்ணை தாயக்கலாம் என்ற எண்ணம் தவறானது.
ஆணின் விந்துப்பையின் விந்தணு தயாராகிறது. ஆணுறுப்பின் அளவிற்கும் குழந்தைப்பேறுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. படுக்கையறையில் துணைகள் காதலுடன் இருந்து தாம்பத்தியம் மேற்கொண்டாலே உற்சாகம் ஓடோடி வரும். படுக்கையறை என்பது தம்பதிகள் மனம்விட்டு பேசி மனதளவிலும், உடல் அளவிலும் ஒருசேர வேண்டிய இடமாகும். அதனை இன்பமாக மாற்றி செயலாற்றுவது இருவரின் கடமையும் கூட என்பதை நினைவில் கொள்ளவும்.