படிப்பு முக்கியம் குழந்தைகளா.. விசாரணைக்காக சென்று, 6 குழந்தைகளின் கல்விக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர்.!



Thoothukudi Police Help 6 Students Education 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம், குளத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுநாயக்கர் சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இதில் ஆறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீதிகளில் விளையாடியபடி இருந்தனர். 

வேறு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காவல் உதவி ஆய்வாளர் அப்பகுதிக்கு சென்று இருந்த நிலையில், குழந்தைகளை படிக்கச் செல்ல வில்லையா? என விசாரித்துள்ளார். அப்போது வறுமை நிலை காரணமாகவும், சாதிச்சான்று தொடர்பான பிரச்சனையாலும் குழந்தைகள் படிக்கச் செல்லவில்லை என பெற்றோர்கள் கூறியுள்ளனர். 

படிக்க உதவி

இதனால் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், குழந்தைகளின் வீட்டருகே இருக்கும் இந்து நாடார் நடுநிலைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தேவையான புத்தகம் பிற உபகரணங்களை வாங்கி கொடுத்தார். மேலும், ஜாதி சான்றிதழ் பெற வழிவகை செய்வதாக குறிப்பிட்டவர், குழந்தைகளை பள்ளியில் படிக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். 

இதையும் படிங்க: ஓரினசேர்க்கையில் 10 வயது சிறுவன் கொடூர கொலை; கோவில்பட்டி துயரத்தில் பரபரப்பு தகவல் அம்பலம்.!

இதன்பேரில் பள்ளி நிர்வாகமும் குழந்தைகளை கல்வி நிலையத்திற்குள் ஏற்றுக்கொண்டது. குழந்தைகள் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எக்காரணம் கொண்டும் படிப்பு விடக்கூடாது. கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி சென்றார். காவல் உதவி ஆய்வாளரின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: 'வஞ்சம் தீர்த்த வாலிபர்கள்..' இளம்பெண்ணுக்கு கத்தி குத்து.!! 2 இளைஞர்கள் கைது.!!