உடலுறவால் பரவும் டெங்கு காய்ச்சல்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
பாதுகாப்பற்ற, முறையற்ற பாலியல் உறவுகளால் எய்ட்ஸ் நோய் பரவுவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், டெங்கு காய்ச்சலும் முறையற்ற பாலியல் உறவால் பரவும் என ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கொசு மூலமாக மனிதருக்கு பரவும். ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இவை பாலியல் உறவிலும் பரவும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மோரிட் பகுதியை சார்ந்த 41 வயது பெண்மணி, கடந்த செப் மாதம் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில், விசாரணையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆண் துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டது உறுதியானது.
ஆண் துணையுடன் பாலியல் உறவில் பெண்மணி ஈடுபட்டு இருந்தாலும் எப்படி டெங்கு பரவும்? என்று சந்தேகித்த மருத்துவர்கள் இருவரையும் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில், ஆணின் விந்தணுவில் டெங்கு இருந்தது உறுதியானது.