மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
நீண்ட நேர குளியல்
ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கம் இருக்கும். சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். சிலர் அதிக நேரம் சாப்பிடுவார்கள். ஒரு சிலரோ நீண்ட நேரம் குளிப்பார்கள். இது சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு இருக்கக்கூடிய பழக்கம்தான். என்னதான் வளர்ந்தாலும், அவர்களை மாற்ற முடியாது. அப்படி உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக நேரம் குளித்த ஒரு மருமகளினால் அதிர்ச்சி ஏற்பட்ட சம்பவம் தான் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.
வெளியில் சென்ற மாமியார்
சம்பல் மாவட்டம் ஹையத்நகரில் 7 மாதங்களுக்கு முன்பாக ஒரு வாலிபருக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் எப்போதும் குளிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. சம்பவ தினத்திலும் அதுபோல அந்த பெண் குளித்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மாமியார், கணவர், மாமனார் அனைவரும் ஏதோ ஒரு வேலைக்காக வெளியில் சென்று விட்டனர்.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!
எட்டி பார்க்கையில் அதிர்ச்சி
வெளியில் சென்ற மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போதும் அந்த பெண் பாத்ரூமில் குளித்துக் கொண்டே இருந்துள்ளார். இவ்வளவு நேரம் உள்ளே என்னதான் செய்கிறாள் என்று கடுப்பான மாமியார் உள்ளே எட்டி பார்க்க அந்த பெண் பாத்ரூமில் இல்லை. பதறியடித்து வீடு எங்கிலும் தேடிய போது தான் வீட்டில் இருந்த பணம் நகை எல்லாம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
திருட்டு வேலை செய்த மருமகள்
வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை அந்த மருமகள் திருடிக் கொண்டு வீட்டில் இருந்து தப்பியோடி இருக்கிறார். இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காதலியை கால் கேர்ள் ஆக்கி வருமானம் பார்த்த இளைஞர்; டேட்டிங் ஆப்-பில் கஸ்டமர்ஸ்.. பகீர் தகவல்.!