35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
First Night-க்கு தயாராகும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்குத்தான் முக்கிய தகவல்..!
ஆயிரம் இரவுகள் வந்து சென்றதும் முதலிரவு என்பது ஆண் - பெண்ணின் வாழ்க்கையில் மறக்க இயலாத நாளாகும். இந்த இனிய நாளில் எவ்வித மனஅழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். முதலிரவு நடைபெறவுள்ள இடத்தை தெரிந்துகொண்டால், மனதளவில் ஏற்படும் பதைபதைப்பு குறையும். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தாம்பத்தியம் மற்றும் உடலுறவு தொடர்பான புத்தகத்தை படிக்க வேண்டும். பிற சந்தேகங்களை பாலியல் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
அதனைப்போல, முதலிரவு நாளில் அதிகளவு சாப்பிட வேண்டாம், அதிகளவு வாசனை கொண்ட மசாலா பொருட்களும் எடுத்துக்கொள்ள கூடாது. முதலிரவுக்கு முன்னதாக குளித்துவிட்டு முதலிரவை தொடங்கலாம். துணையின் உணர்ச்சிக்கு உற்சாகத்தை ஏற்படுத்த காதுகளுக்கு பின்புறமும், மணிக்கட்டு பகுதியிலும் மிதமான வாசனை திரவியத்தை பூசலாம். அலங்கார பூக்களுடன் ஆளை தூக்கும் நறுமணம் இங்கு பேருதவி செய்கிறது.
முதலில் இருவருக்கும் கொஞ்சம் படபடப்பு இருக்கும் என்றாலும், சில மணித்துளியில் அது சரியாகிவிடும். கணவரின் சில செயல்கள் தர்ம சங்கடமாக இருந்தால், அதனை தயக்கம் இன்றி அன்புடன் தெரிவிக்க வேண்டும். முதலிரவிலேயே உடலுறவை தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருவரும் மனதளவில் புரிந்துகொண்ட தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
முதலிரவை பொறுத்த வரையில் முன் விளையாட்டுகளில் ஈடுபட்டுவிட்டு தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம். முதல் முறையாக பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது பிறப்புறுப்பு பகுதியில் வலி ஏற்படும். அதனை குறைக்க முன்விளையாட்டுகளை சரியாக கணவன் செய்ய வேண்டியது அவசியம். இயலாத பட்சத்தில் வலியை குறைக்க தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகம் செய்யலாம்.