'கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு' பற்றி உதயநிதி போட்ட ட்வீட் வைரல்.!



DMK Udaya Nidhi post about Ashwin retirement 

உற்சாக வரவேற்பு

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அதன் பின் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்த அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார். அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்திற்கே சென்று அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

இதன்பின் மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள அஸ்வினின் இல்லத்திற்கு அவர் சென்றபோது அங்கும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரது ஓய்வு பற்றி பிரபலங்கள் பலரும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்; 25 வயது இளைஞருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!

எண்ணற்ற நினைவுகள்

அந்த பதிவில், "தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கு வரை சென்று பெருமை சேர்த்தவர் அஸ்வின். ஒரு கிரிக்கெட் வீரராக உங்களுடைய தாக்கம் எங்கள் நினைவில் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பின்னிலும் விளையாட்டை உயர்த்தி எண்ணற்ற நினைவுகளை எங்களுக்கு வாரி வழங்கி உள்ளீர்கள். 

வைரலாகும் எக்ஸ் பதிவு

உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும். வாழ்த்துக்கள்." என்று தெரிவித்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு தற்போது அஸ்வின் ரசிகர்கள் மற்றும் திமுக உடன் பிறப்புகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: படிப்பு முக்கியம் குழந்தைகளா.. விசாரணைக்காக சென்று, 6 குழந்தைகளின் கல்விக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர்.!