53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அந்த வழி உடலுறவால் புற்றுநோய் அபாயம்?... அம்பலமான அதிர்ச்சி தகவல்.. தம்பதிகளே மறந்துடாதீங்க.!
குரல்வளை, தொண்டை பகுதியில் ஏற்படும் புற்றுநோய் வாய்வழி புற்றுநோய் / தொண்டைப்புற்றுநோய் என அழைக்கப்படுகிறது. தொண்டையின் உட்பகுதியில் தட்டையாக காணப்படும் செல்கள் மீது வாய்வழிப்புற்றுநோய் உண்டாகும்.
கடந்த 20 ஆண்டுகளில் தொண்டை புற்றுநோயின் பாதிப்பு என்பது வெகுவாக அதிகரித்து இருக்கிறது. இந்தவகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 70%-க்கும் அதிகமானோர் மனித பேபிலோமா என்ற வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதும் உறுதியாகியுள்ளது.
இவ்வகை வைரஸ் கர்ப்பப்பை & ஆசனவாய் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. இல்லறத்தை தொடங்கி தாம்பத்திய வாழ்க்கையை மேற்கொள்ளும் தம்பதிகள், வாய்வழி புணர்ச்சியை மேற்கொள்வதினால் தொண்டை புற்றுநோய் கடுமையாக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இவ்விவாகரத்தில் மருத்துவர்களிடையே இருவேறு கருத்துக்களும் இருக்கின்றன. வாய்வழி புற்றுநோய்க்கு வாய்வழிப்புணர்ச்சி பகுதியளவு காரணம் எனினும், முத்தம் வாயிலாக பரவும் எச்.பி.வி வைரஸ் காரணமாகவும் வாயில் புற்றுநோய் ஏற்படலாம் எனவும் கூறுகின்றனர்.
தம்பதிகள் ஒன்றுசேருகையில், இருவரின் சருமமும் இணைந்து, ஆணுறுப்பு-பெண்ணுறுப்பு புணர்ச்சி, பெண்ணுறுப்பு / ஆசனவாய்ப்புணர்ச்சி, பெண்ணுறுப்பு / வாய்வழி புணர்ச்சி, ஆணுறுப்பு வாய்வழிப்புணர்ச்சி போன்றவை காரணமாகவும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் வைரஸ் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.
எச்.பி.வி வைரஸின் காரணமாக பாதிக்கப்படும் செல்கள், இனப்பெருக்க பாலுறுப்பு பகுதிகளை புற்றுநோய் செல்களாக மாறி, புற்றுக்கட்டிகளாக வளர்க்கும். அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில், தொண்டைப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 70% நபர்களுக்கு எச்.பி.வி வைரஸ் பாதிப்பு உறுதியானது.
நாக்குப்பகுதியின் பின்புறம் வளர்ச்சியடையும் புற்றுநோய் செல்கள், பின்னாளில் மனிதனின் உயிருக்கே பெரும் பிரச்சனையாக அமைகிறது. புற்றுநோய்செல்கள் வளர்ச்சியின் செயல்கள் முதலில் தெரியாது என்பதால், தம்பதிகள் தங்களுக்கு பிடித்த விதங்களில் உல்லாசமாக இருந்து, அன்பின் அடையாளமாக முத்தங்களை பரிமாறி புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
வாய்வழி புணர்ச்சி உணர்ச்சியை தூண்டுவதால் பலரும் அதனை விரும்புகிறார்கள் என்பது நிதர்சனமாக இருப்பினும், அவை ஆபத்தானது என்பதற்கு இதுபோன்ற அதிர்ச்சி ஆய்வு முடிவுகளே சாட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. வாய்வழி புணர்ச்சியால் எச்.பி.வி வைரஸ் மட்டுமல்லாது, கொனோரியா, சிபிலிஸ் உட்பட பிற பாலியல் நோய்களும் பரவும்.