உஷார்.. சிறுநீரை அடக்கி வைச்சா, இப்படி கூட நடக்குமா.?! அதிர்ச்சி தகவல்.!



DO NOT CONTROL URINE FOR LONG TIME IT MAY CAUSE OUR HEALTH

பாதிப்புகள்

அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் நம் உடலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம்மில் பலரும் அலுவலக பணியில் இருக்கும் போதோ அல்லது பள்ளி கல்லூரியில் இருக்கும் போதோ, நீண்ட தூரம் பயணம் செய்யும் போதோ சிறுநீர் வந்தால் நீண்ட நேரம் அடக்கி வைப்போம்.

பலவீனமாகும் சிறுநீர்ப்பை தசைகள்

இதுபோல செய்வதால் நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வாறு, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பை தசைகள் பலவீனம் அடைந்து தும்மும் போது, இருமும் போது அல்லது சிரிக்கும்போது சிறுநீர் கசிவு ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

இதையும் படிங்க: இரவு உணவுக்கு பின் இதை செய்தால், உடல் எடை மளமளவென்று குறையும்.. எப்படி தெரியுமா.?!

kidney

சிறுநீர் கற்கள்

மேலும் சிறு நீர் பாதை தொற்றுகளை இது ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சிறுநீர்ப்பையில் சிறுநீரை தேக்கி வைத்திருப்பதால் அதில் இருக்கும் தாதுக்கள் படிகமாகி சிறுநீர் பையில் கற்களை உருவாக்குகின்றனவாம். இது மட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் சிறுநீரில் ரத்தம் வருதல் போன்றவையும் ஏற்படும்.

புற்றுநோய் அபாயம்

சிறுநீர் அடிக்கடி கழித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வை இது ஏற்படுத்தும். அதிக நேரம் சிறுநீரை அடக்கிக் கொள்வதால் புற்றுநோய் கூட வரும் வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பெண்களே அசத்தல் டிப்ஸ்.. மாதவிடாய் வலியை குறைக்க பழங்கள், காய்கறிகள்.. டிப்ஸ் இதோ.!