மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரட்டை குழந்தை வேண்டுமா?.. தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?.. இப்படி செய்தால் போதுமா?.. அசத்தல் தகவல்.!
குழந்தைகள் என்றாலே ஆவல்தான், சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை இருக்கும். கர்ப்ப காலத்திலேயே இரட்டையர்களின் ஒன்று ஆண், ஒன்று பெண், இரண்டும் ஆண், இரண்டும் பெண் என வீட்டில் செல்ல சண்டையே நடக்கும். அதனைப்போல, சர்வதிஷா அளவில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. முன்பு எட்டாக்கனியாக இருந்த இரட்டைக்குழந்தைகள் பிறப்பு இன்று சாதாரணமாகியுள்ளது.
பொதுவாக இரட்டை குழந்தைகளை திரைப்படங்களில் பார்த்து மகிழ்ந்த காலங்கள் சென்று, அவர்களை நேரில் பார்த்து கொஞ்சி மகிழ்வது நடந்து வருகிறது. அந்த வகையில், இரட்டை குழந்தை பிறக்க இயற்கையாக ஏதேனும் சாப்பிடலாமா? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு உதவி செய்யும். அறிவியலில் இரட்டை குழந்தைகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றனர்.
i) உருவ ஒற்றுமையுடைய குழந்தைகள் (Identical Twins)
ii) உருவ வேறுபாடுடைய குழந்தைகள் (Fraternal Twins)
குறிப்பிட்ட விந்தணுவின் மூலமாக உண்டாகும் இருவேறு கருக்கள் ஒரே உருவ ஒற்றுமையுடன் இருந்தால் இரட்டையர்கள் ஆவார்கள்.
பெண்களின் வயது:
பெண்களின் வயது அதிகமாகும் போது இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. மெனோபாஸ் நிலைக்கு முன்னதாக இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்புகள் அதிகம். 35 வயதில் குழந்தை பெற முயற்சித்தால் இரட்டையர்களுக்கான சாத்தியம் அதிகம்.
செயற்கை கருத்தரித்தல்:
ஐ.வி.எப் (IVF) எனப்படும் செயற்கை கருத்தரித்தலில் இரட்டை குழந்தை வாய்ப்புகள் இயல்பாகவே அமைகிறது. கருப்பையில் ஒன்றிற்கும் அதிகமான கருமுட்டை உருவாகும் நேரத்தில் இரட்டையர் வாய்ப்பு எளிதாகிறது. பல நாடுகளில் IVF மூலமாக மூன்று அல்லது நான்கு குழந்தைகளை கருத்தரிக்க வைக்கும் நடைமுறையில் உள்ளன.
கருத்தடை மருந்து:
கருத்தடை சாதனம், கருத்தடை மருந்துகளை எடுத்தால் அதனை நிறுத்தியதும் கருவுற முயற்சிக்கும் பட்சத்தில் இரட்டை குழந்தைகள் வாய்ப்புகள் அதிகம் இருக்கள்ம. கருத்தடை மாத்திரைகளை நிறுத்தியதும், கருமுட்டை அதிகளவில் உருவாகும். இவ்வாறான தருணத்தில் தம்பதிகள் வைத்தால் இரட்டையர்கள் பிறக்க வாய்ப்பு அதிகம்.
தாய்ப்பால்:
முதல் குழந்தை பிறந்து, இரண்டாவது குழந்தைக்கு முயற்சிக்கலாம் என்று எண்ணத்தில் இருக்கும் தம்பதிகள், முதல் குழந்தைக்கு அதிகளவு தாய்ப்பால் தர வேண்டும். அவ்வாறு தாய்ப்பால் தந்தால் இரண்டாவது குழந்தை இரட்டையராக பிறக்க வாய்ப்புகள் உள்ளன.
இயற்கை:
சர்க்கரைவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிட்டால், அவை இயற்கையான சத்துக்கள் வாயிலாக இரட்டையர்கள் பிறப்பை ஊக்குவிக்கும். இரும்புசத்து, கால்சியம், ஜின்க் சத்துள்ள உணவுகளான பாதாம், பேரீட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். சந்தேகம் இருப்பின் மருத்துவரை நாடுவது நல்லது.