அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
திருமணம் ஆன மூன்றே நாளில் தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை!! அப்படி என்ன செய்தார் மனைவி?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கூட்டகவுண்டம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் இவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தீடீரென கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர் புதிய வாழ்க்கை வாழ்வதற்காக செல்லத்துரையின் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்ததும் மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் எதிர்பார்த்தபடி வீட்டில் கழிவறை இல்லாததுதான் அதிர்ச்சிக்கு காரணம் இதனால் அவர் தனது தாய் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்று விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த புதுமாப்பிள்ளை செல்லத்துரை தனது காதல் மனைவியை இழந்த சோகத்தில் தனது வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.