திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு மருத்துவமனையின் அவல நிலை; எலி கடித்து பச்சிளம் குழந்தை பரிதாப பலி.!
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பச்சிளம் குழந்தை எலி கடித்து பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா அரசு மருத்துவ கல்லூரியில் நஜ்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
எனினும் குழந்தைக்கு ஆரோக்கியம் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் வழக்கம்போல் குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அறைக்கு சென்ற தாய் கதறி அழுதுள்ளார்.
உடனே மருத்துவமனை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடல் மற்றும் கால்களில் ரத்த காயங்களுடன் இருந்தது. உடனடியாக பரிசோதித்து ஊழியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்.
இதுகுறித்து குழந்தையின் தாய் கூறும்போது நான் சென்று பார்க்கும்போது குழந்தையின் உடலில் எலி கடித்த சுவடு இருந்தது. அதன்மூலம் உருவான ரத்த கரையும் படிந்து இருந்தது என்று என்று தெரிவித்தார். இதனால் குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளிக்கும் போது குழந்தைக்கு ஏற்கனவே இருதயம் சம்பந்தப்பட்ட குறைபாடு இருந்தது. அதனால்தான் குழந்தை இறந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் எலி தொல்லைகள் இருப்பது உண்மைதான் ஆனால் அதனால் குழந்தை இறக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக 3 பேர் கொண்ட குழ அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை இறந்தது தொடர்பாகவும், மருத்துவமனையில் காணப்படும் சுகாதார சீர்கேடு தொடர்பாக விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய அக்குழுவினருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.