மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்குவாரா டிராவிட்! #MeToo வில் வெளியாகி வைரலாகும் பரபரப்பு வீடியோ!
தற்பொழுது #MeToo என்ற வார்த்தை மிகவும் பிரபலமாக உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைதளங்களில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இதன் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த வார்த்தையை கேட்கும் போது தவறு செய்த திரையுலக பிரபலங்கள் உட்பட முக்கிய நபர்கள் தாங்கள் எப்பொழுது இதில் சிக்குவோம் என்ற பீதியில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இதில் சிக்குவாரா என்ற எண்ணத்தில் அவருடைய கண்ணியத்தை பரிசோதிக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர் ஒருவர் டிராவிட்டுடன் பேட்டி காண்கிறார். பிறகு பேட்டி முடிந்ததும் நான் உங்களுடன் ஐந்து நிமிடம் தனியாக பேச விரும்புகிறேன் என்று கூறுகிறார், அதற்கு திராவிட் சம்மதம் தெரிவிக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த பெண் ராகுல் டிராவிட்டிடம் மிக நெருக்கமாக பேச ஆரம்பிக்கிறார். இறுதியில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார் உடனே சுதாரித்துக்கொண்ட டிராவிட் கோபமாக அந்த பெண்ணுக்கு சில அறிவுரைகளை கூறி வெளியேற முயல்கிறார்.
😂😂😂 pic.twitter.com/G8DyYYxKFq
— . (@SN0wbaIL) October 14, 2018
அதன் பிறகுதான் அவருக்கு தெரியபடுத்துகிறார்கள் இது ஒரு சோதனை முறையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று, பல முக்கிய பிரமுகர்கள் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களை அவர்களாகவே உருவாக்கிக்கொண்டு தங்களின் சுய ரூபத்தை காட்டும் போது டிராவிட் போன்ற பிரபலங்களும் நேர்மையாக தான் இருக்கிறார்கள் என்று உணர்த்தவே இந்த காணொளியானது இணையதளவாசி ஒருவரால் பகிரப்பட்டு இருக்கிறது.
ஆனால் ராகுல் டிராவிட் அவர்களுக்கு மத்தியில் ஒரு விதிவிலக்காக தன்னை ஒரு மிகச்சிறந்த மனிதர் என்று நிரூபித்துள்ளார்.