மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படியும் ஒரு நூதன திருட்டு; ஓரினசேர்க்கை ஆசையால் பணத்தை இழந்த ஆண்கள்
தூத்துக்குடியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 32). இவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் ஓரினசேர்க்கைக்கு விரும்பும் நபர்களை கண்டறிந்து அவர்களை அழைத்துவந்து விடுதியில் அறை எடுத்து தங்கி அந்த நபர்களை நிர்வாணமாக்குவார்.
அந்த நேரத்தில் அருகில் அறை எடுத்து தங்கியிருக்கும் அவரது கூட்டாளிகள் அந்த அறைக்குள் நுழைந்து செல்போனில் படம் எடுத்து மிரட்டி அந்த நபரிடம் இருக்கும் பணம், நகை போன்றவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர் மந்திரமூர்த்தி தனக்கு எதுவும் தெரியாததுபோல அந்த நபரை அனுப்பிவைத்துவிடுவார்.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் அறையில் இருந்து வாலிபர் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த தனியார் விடுதியில் தங்கி இருந்தவர்கள் ஒன்று கூடி அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அந்த அறையில் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி மற்றொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். இதில் அவர்கள் ஓரினசேர்க்கைக்கு ஆண்களை அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த கும்பலிடம் இருந்து அந்த இளைஞரை மீட்டு மற்ற 4 பேரையும் அறையிலேயே சிறை வைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பந்தப்பட்ட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.
முகநூல் மூலம் பழகும் நபர்கள் பெண்கள் மீது ஆர்வம் கொண்டவர்கள் என்றால், பெண்ணைப் போன்று மந்திர மூர்த்தி நடித்து ஏமாற்றியது விசாரணை தெரியவந்துள்ளது. ஓரினச் சேர்க்கைக்கு ஆர்வம் காட்டியவர்களையும் அறை எடுக்கச் சொல்லி, நண்பர்களுடன் சென்று தாக்கி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலைச் சேர்ந்த முத்துராமலிங்கம் இதுபோல், 15 பேரிடம் மோசடி செய்துள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.