மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிக்ஸனை எலிமினேட் செய்ய மாயா குரூப் போட்ட ரகசிய திட்டம்.!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் நிக்ஸன் இந்த வீட்டிலிருந்து வெளியேற என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக நிக்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு தொந்தரவு கொடுக்கும் விதத்தில், லிவிங் ஏரியாவில் மணி வைக்கப்பட்டிருக்கிறது. அதனை அடித்து சக போட்டியாளர்கள் நியாயம் கேட்கலாம் என்று பிக்பாஸ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் பூகம்பம் என்று டாஸ்க்குகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க் தற்போது முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் சகஜ நிலைக்கு திரும்பியிருக்கிறார்கள். இந்த டாஸ்க்கில் விசித்ரா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் எதிரெதிரா இருந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து விட்டனர்.
அர்ச்சனாவும், விசித்திராவும் தற்போது எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர். கடந்த வாரம் இந்த வீட்டிற்குள் விஜய் வர்மா மீண்டும் வந்த நிலையில், ஆர்.ஜே பிராவோ இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதோடு பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவருக்கும் கமல்ஹாசன் கடுமையாக அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.
தற்போது வெளியாகியிருக்கின்ற ஒரு ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வாரம் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிக்சனின் நிர்வாகத்தில் யாருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால், நியாயம் கேட்டு, இந்த மணியை அடிக்கலாம். புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டால், நிக்சனின் பதவி பறிக்கப்படும். மேலும் நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், மாயா நிக்சனுக்கு தேவை என்றால் அவன் நம்மை கைவிட்டு விடுவான், அவனை இந்த வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான வேலையை பார்க்கலாம் என்று பூர்ணிமாவிடம் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.