ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் தாறுமாறாக எகிறி வரும் தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சமீப காலமாக பங்குசந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால் பல முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.