ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. விண்ணை முட்டிய தங்கம் விலை..! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகக் குறைந்து வந்தது இல்லத்தரசிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கி வந்தனர். அவ்வப்போது விலை சற்று உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை. இந்நிலையில் இந்த வாரத்திலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.560 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல ஒருகிராம் தங்கம் ரூ.70 உயர்ந்து 4 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66 ஆயிரத்து 700 ரூபாயும், ஒருகிராம் 66.70 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.