ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஆத்தாடி... மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.! கவலையில் இல்லத்தரசிகள்.!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவருகிறது.
இந்தநிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,174 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,184 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராம் 1 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.