அச்சச்சோ.. காய்கறி, மளிகை பொருட்களை தொடர்ந்து, அரிசி விலையும் உயரப்போகிறது... இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!



India and Global Rice Price may Increase 

 

எல் நினோ விளைவு காரணமாக பல்வேறு காலநிலை பிரச்சனைகளை இந்தியா சந்தித்து வருகிறது. தொடர் மழை, அதிக வெயில், கடுமையான குளிர் என அதன் விளைவு தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரமாகவே தக்காளியின் விலை பல்வேறு மாநிலங்களில் கடும் உச்சத்தை சந்தித்தது. 

அதனைத்தொடர்ந்து அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், கத்தரிக்காய், உருளை, சுரைக்காய் என அனைத்து விதமான காய்கறிகளின் விலையும் உயர்ந்து வந்தன. இதனால் உணவகத்தில் உணவுகளின் விலை உயர்த்தப்படவும் அறிவிப்புகள் வெளியாகின. 

rice

இந்த அதிர்ச்சி முடிவதற்குள் சீரகம், பருப்பு வகைகள் என ஒவ்வொரு மளிகை பொருட்களின் விலையும் அடுத்து உச்சத்தை சந்தித்தது. இந்த நிலையில், ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரலாம் என்ற அறிவிப்புக்கேற்ப, அரிசி விலை அடுத்தபடியாக உச்சகட்டத்தை தொடங்கியுள்ளது. 

உலகளவில் கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவு அரிசியின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது இந்திய அளவில் பரவலாக அரிசி விலை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 40% அரிசியை இந்திய உற்பத்தி செய்கிறது. 

சர்வதேச சந்தைகளில் மலிவு விலையில் விற்பனை செய்ய்யப்படும் இந்திய அரிசியின் ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தால், இந்திய அளவிலும் - உலகளவிலும் அரிசியின் விலை உயரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.