மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்கள் குழந்தை அதிக நேரம் போனை உபயோகித்து வருகிறதா! அதனை தடுக்க உடனே இதை செய்து பாருங்கள்.
இன்றை காலக்கட்டத்தில் குழந்தைகள் வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதை விடுத்து எப்போது மொபைல் போனில் தான் அதிக நேரத்தை செலவு செய்கின்றனர். போனிலேயே அனைத்து விதமான கேம்களும் இருப்பதால் அதனை இன்ஸ்டால் செய்து விளையாடி வருகின்றனர்.
பெற்றோர்களும் குழந்தை தனக்கு தொந்தரவு தராமல் விளையாடுகிறது, அதன் மூலம் என் குழந்தை சாப்பிட்டு கொள்கிறது, போனை கொடுத்தாள் அழுவதை நிறுத்தி விடுகிறது என்பதற்காக மொபைல் போனை கொடுத்து பழக்கப்படுத்தி விடுகிறோம். இதனால் குழந்தை அதற்கு அடிமையாகவே மாறி விடுகிறது.
மேலும் இருட்டிற்குள் உட்கார்ந்து குழந்தை அதிக நேரம் போனை உபயோகிப்பதால் விழித்திரை நரம்புகள் பாதிப்பு, பார்வைத்திறனில் குறை ஏற்படுகிறது. இதனால் முதலில் தூக்கமின்மை ஏற்றப்படுகிறது.
இதனை தடுக்க பெற்றோர்கள் குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுக்கு தேவையான விளையாட்டை தேர்வு செய்து அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்.
அதன் மூலம் பெற்றோர்களும் புதிதாக அந்த விளையாட்டில் உள்ள சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.ஓடி ஆடி விளையாடும் போது குழந்தையின் உடலில் ஒரு வித புத்துணர்ச்சி பிறக்கிறது. மேலும் வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு ஒரு சில விதிகளை நீங்களே விடுத்து அதன் படி நடக்க கற்றுகொடுங்கள்.