2.0 படம் எப்படி? படம் பார்த்துவிட்டு வெளிநாட்டில் இருந்து வெளியான முதல் விமர்சனம்!



2-point-o-moive-first-review-from-dubai

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் 2.0 படம் நாளை வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை அதிக பொருள் செலவில் தயாரித்துள்ளது. இதற்கு முன்னர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படம்தான் இதுவரை அதிக பொருள் செலவில் உருவான முதல் தமிழ் திரைப்படம். தற்போது 2.0 படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இந்நிலையில் நாளை 28-11-2018 உலகம் முழுவதும் 2.0 படம் வெளியாக உள்ளது.மேலும் படத்தில் பல்வேறு டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் 2.0 படம் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

2.0இந்நிலையில் 2.0 படம் குறித்த முதல் கருத்து துபாயில் இருந்து பகிரப்பட்டுள்ளது. தணிக்கை குழுவின் முக்கிய உறுப்பினரான உமைர் சந்து என்பவர்  2.0 படத்தை பார்த்துவிட்டு சிறிய விமர்சனம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ரஜினிகாந்த் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு நடிகராலும் இந்த அளவிற்கு நடிக்க முடியாது, அந்தளவிற்கு 2.0 படத்தில் ரஜினி நடித்துள்ளார்  எனவும் கூறியுள்ளார். மேலும் நடிகை எமிஜாக்சன் தனது நடிப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் உமைர் தெரிவித்துள்ளார்.

மேலும் படம் முழுவதும் அண்ட்ராய்டு தொழிநுட்ப வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டதெனவும், மிகவும் சிறப்பான கற்பனை கதை எனவும் உமைர் சந்து கூறியுள்ளார். 

2.0

நடிகர் அக்ஷய் குமார் மிரட்டும் தொனியில், வெறித்தனமாக நடித்துள்ளார். இந்தப் படம் அக்ஷய் மற்றும் ரஜினிகாந்துக்கு மீண்டும் ஒரு மைல்கல்லாக அமையும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக அக்ஷய் குமார் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இதற்காக அவர் அணிந்து இருக்கும் வேடம் பிரமிக்க வைக்கிறது எனவும், படம் முழுவதும் அவரது நடிப்பு வியக்கவைப்பதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் சிறந்த சைன்ஸ் பிக்ஷன் படம் என்றும். ஆண்ட்ராய்டு புரட்சியை ஒரு பரபரப்பாக்கி, அதில் வைத்திருக்கும் சதி, கற்பனை திரைக்கதை, அதிர்ச்சியூட்டும் விளைவுகள் என்று படம் த்ரில்லாக செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.