மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2023ல் நம்மை விட்டு மறைந்த முக்கிய திரைப்பிரபலங்கள்: நீங்கா நினைவுகள்..!
2023-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். இன்னும் 15 நாட்களில் உலகமே ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது. நடப்பாண்டு நமக்கு பலவிதமான நன்மைகளையும், தீமைகளையும், சோகங்களையும், துரோகத்தின் அடையாளத்தையும் வெளிப்படுத்தி இருக்கும்.
இந்நிலையில் இந்த ஆண்டு மறைந்த திரைத்துறை பிரபலங்கள் இன்னும் நீங்காமல் நினைவில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் ஊருக்காக ஓடோடி வாழ்ந்த மயில்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா, இயக்குனர் மாரிமுத்து, நடிகர் சரத்பாபு, டிபி கஜேந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களின் உயிரை இழந்தனர். இவர்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும் இவர்களின் நடிப்பு இன்னும் அவர்களை உயிருடன் வைத்திருக்கிறது.