மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
60 அடி ஆழ்கடலில் தல அஜித்.. 30 ஆண்டு திரையுலக வெற்றி கொண்டாட்டம்..! மாஸ் செய்யும் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் கடந்த 1993இல் வெளியான "அமராவதி" படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் அஜித். இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இதுவரையிலும் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றியையே அளித்துள்ளது.
இருப்பினும் ஒரு சில படங்களில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், ஒவ்வொரு முறை விழும்போதும் எப்படி எழலாம் என்று யோசிக்கும் தன்மை உடையவர். தான் விழுந்ததை நினைத்து முடங்கிவிடாமல் மீண்டும், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பார்.
தற்போது நடிகர் அஜித்தின் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள் ஆழ்கடலின் ஆழத்திற்கு சென்று பேனர் வைத்துள்ளனர்.
இரு அஜித் ரசிகர்கள் ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன் ஸ்கூபா டைவிங்கின் மூலம் கிட்டத்தட்ட 60 அடி ஆழத்திற்கு சென்று அங்கு தல அஜித்தின் பேனர் வைத்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.