திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
96 படத்தில் திரிஷாவுக்கு பதில் இந்த நடிகை தான் நடிக்க இருந்தாராம்!
இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்திருந்த படம் தான் 96. இந்த படம் அனைவரையும் தங்களது பள்ளி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தது.
நீண்ட வெற்றிக்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு வெற்றியை தேடி தந்த படம் 96. மேலும் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி அனைவராலும் ரசிக்க பட்டது. அதுமட்டுமின்றி அழகான காதல் காவியமாகவும் இந்த படம் விளங்கியது.
ஆனால் இந்த படத்தில் முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியர்
தான் நடிக்க இருந்ததாம். ஆனால் இயக்குனர் பல முறை மஞ்சு வாரியரை காண சென்ற போது அவரை காண முடியவில்லையாம். அதன் காரணத்தால் இயக்குனர் திரிஷாவை நாடியுள்ளார்.
தற்போது அசுரன் பட பேட்டியின் போது இதனை பற்றி மிக சோகமாக கூறியுள்ளார். மேலும் 96 பட இயக்குனர் என்னை அணுகியிருந்தால் கண்டிப்பாக நான் அதில் நடித்திருப்பேன் என கூறியுள்ளார்.