மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு.. ஒரு தலைக்காதலால் நடிகைக்கு நேர்ந்த சோகம்.!
மாடலிங் மற்றும் நடிகையாக இருந்து கொண்டே, வெற்றிகரமான ஆயுர்வேத மருத்துவராகவும், சமூக ஆர்வலராகவும் தொடர்ந்து வருபவர் தான் ரேச்சல் ரெபேக்கா. இவர் லக்கி மேன், குட் நைட், கடைசி விவசாயி ஆகிய படங்களில் துணை நடிகை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜாக்சன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ள ரெபேக்கா, தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட கொடுமையான நிகழ்வை சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு கூறியுள்ளார். அப்போது அவர், " சிறு வயதில் மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்தேன்.
2008ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்தபோது, ஒருவன் என்னை காதலிப்பதாக தொந்தரவு செய்து வந்தான். எனக்கு விருப்பமில்லை என்று கூறி மறுத்தும், தொடர்ந்து விடாமல் டார்ச்சர் செய்து வந்தவன், ஒருநாள் என் வீட்டிற்கு வந்து என் போனை பிடுங்கி கொண்டு, அவன் சொல்லும் இடத்திற்கு வர சொன்னான்.
பிறகு ஒரு முறை வீட்டிற்கு வந்து 16 முறை என்னை கத்தியால் குத்தினான். அக்கம் பக்கத்தினர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு தான் நான் சாதிக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஒரு உத்வேகத்துடன் நன்றாக வருகிறேன்" என்று கூறியுள்ளார்.