ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஏ. ஆர். ரகுமான் போட்ட ஒரே ஒரு ட்வீட்! இணையத்தில் தீயாய் பரவும் பதிவு.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களுக்கு வித்தியாசமான முறையில் இசையமைத்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம்,மலையாளம் என பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இசைப்புயல் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் ஏராளமான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர்.
தற்போது ஏ. ஆர். ரகுமானும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முழு பெயரான அல்லா ரக்கா ரஹ்மான் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
— A.R.Rahman (@arrahman) December 15, 2019