ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களுக்கு வித்தியாசமான முறையில் இசையமைத்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம்,மலையாளம் என பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இசைப்புயல் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் ஏராளமான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர் இன்று எத்தனையோ கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் சிறுவயதில் ரெக்கார்ட் ப்ளேயரை இயக்கியதற்காக ரூ. 50 முதல் சம்பளமாகப் வாங்கியுள்ளார். மேலும் தனது முதல் படமான ரோஜா படத்திற்கு ரூபாய் 25,000 சம்பளமாக வாங்கியுள்ளார்.