திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் சிறுவயதில் எப்படி இருந்துள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்.
தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ. ஆர். ரகுமான். அதனை தொடர்ந்து இந்தி, ஆங்கிலம், தமிழ் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
இவர் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார்.
அதுமட்டுமின்றி மின்சார கனவு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் உயரிய விருதான இந்திய அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இதுவரை இவர் 70 க்கும் மேற்ப்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.
இவர் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது அவரின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.